மங்கோலிய தலைமை அமைச்சர் வாங்யீயுடன் சந்திப்பு

Estimated read time 1 min read

ஜூன் 15ஆம் நாள், மங்கோலிய தலைமை அமைச்சர் வுஜாரால் உலான்பாதரில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயைச் சந்தித்துரையாடினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீனாவும் மங்கோலியாவும் என்றுமே நட்பு அண்டை நாடுகளாகும். நட்பு, ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவது இரு நாடுகளின் ஒரே சரியான தேர்வாகும் என்றார். மேலும், இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை மற்றும் ஆதரவைத் தொடர வேண்டும். ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இரு தரப்பின் ஒத்த விருப்பமாகும். மங்கோலியாவுடன் இணைந்து நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவை உயர் தரமுடன் கூட்டாக கட்டியமைக்கச் சீனா விரும்புகிறது. இரு தரப்பின் ஒத்துழைப்பு, சீனா-மங்கோலியா-ரஷியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகிய மூன்று வளர்ச்சி உந்து சக்தியை மங்கோலியா நன்கு பயன்படுத்தி சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருத்தமான நவீன பாதையில் வளர்வதற்கு உதவியளிக்கவும் விரும்புகிறது என்றும் வாங்யீ தெரிவித்தார்.

You May Also Like

More From Author