ஆகஸ்ட் 23ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற 2வது சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி அனைத்து இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. இது குறித்து, சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சு ஃபாங் லியேன் அம்மையார் 27ம் நாள் கூறுகையில்,
தொடர்புடைய நிலைமையைக் கவனித்தோம். ஜுலை 26ம் நாள் நடைபெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பை அடுத்து, மின் ஜின் தாங் கட்சி, மற்ற கட்சியை மட்டுப்படுத்தி, சமூகத்தைப் பிளவுப்படுத்தும் கேலிக்கூத்து குறித்து, தைவான் மக்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். தைவான் சுதந்திரச் சக்திகளின் எந்த பிரிவினை மற்றும் அரசியல் நடவடிக்கைகளும், மக்களின் ஆதரவைப் பெறாது. அவை தோல்வியடைவது உறுதி என்று தெரிவித்தார்.