சீன-ஐரோப்பிய உறவு பற்றி வாங்யி கருத்து

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 25ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து பேசினார்.

இவ்வாண்டு சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும் என்று கூறிய அவர், இரு தரப்பறவின் வளர்ச்சிக்கு பரஸ்பர மதிப்பளிப்பது, கூட்டாளியுறவில் ஊன்றி நிற்பது, பல தரப்புவாதத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்துவது ஆகிய 3 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

மேலும் உக்ரேன் நெருக்கடி, இஸ்ரேல்-ஈரான் மோதல், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகள் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை அவர் எடுத்து கூறி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author