எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

Estimated read time 0 min read

விராலிமலை சட்டமன்ற மன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர். சபாநாயகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் சரிந்தது. 47 ஆக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 42 ஆக சரிந்தது. இதேபோல் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் ஓரிரு நாளில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதன் பின்னணியில் குதிரை பேரம் இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஆரோக்கியமான அரசியல் இல்லை எனக் கூறியிருந்தார்.

You May Also Like

More From Author