ஜூன் 19 அன்று வெளியாகிறது ‘சின்ன சின்ன ஆசை’!

Estimated read time 1 min read

சென்னை : பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் தம்பி ராமையா, காளி வெங்கட் சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’

‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.

பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘சின்ன சின்ன ஆசை’ திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.

காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க, அற்புதமான வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் சுவாரசியமான வேடங்களில் தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட்டும் நடிக்கின்றனர்.

’96’ புகழ் கோவிந்த் வசந்தாவின் இதயம் தொடும் இசையில் ஆறு அழகான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: சாபு மோகன், உடைகள்: சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி, ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் சென்சார் வாரியத்திடம் இருந்து யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய படக்குழுவினர், “மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே ‘சின்ன சின்ன ஆசை’. அனைத்து ரசிகர்களும் ஒன்றிப் போகும் வகையில் திரைக்கதையும், நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்துள்ளன,” என்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author