சீனா வெளியிட்ட செய்தியின் படி, 16ஆவது பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு அலுவலுக்கான உயர் நிலை பிரதிநிதி கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பங்கெடுப்பார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ச்சியன் 18ஆம் நாள் கூறுகையில்,
16ஆவது பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு அலுவலுக்கான உயர் நிலை பிரதிநிதி கூட்டம் ஜுன் 22 மற்றும் 23ஆம் நாள், புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தற்போதைய சர்வதேச பாதுகாப்பு நிலைமை, சர்வதேச மற்றும் பிரதேச முக்கிய பிரச்சினைகள், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு அறைகூவல்களைச் சமாளிப்பது ஆகியவை குறித்து, சீனா, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் கருத்துகளைப் பரிமாறி, செப்டம்பரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் மாநாட்டுக்கு அரசியல் ஆயத்தம் செய்யும். இந்த கூட்டத்தை வாய்ப்பாக கொண்டு, பிரிக்ஸ் நாடுகளுடனான தொடர்பை வலுப்படுத்தி, பாதுகாப்பு துறையிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு பங்காற்ற சீனா எதிர்பார்க்கின்றது என்றார்.
