சந்தை ஒழுங்குமுறைக்கான சீனத் தேசிய நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட தேசிய தரநிலைப் பொருட்களின் (National Standard material) எண்ணிக்கை 1139ஐ எட்டி, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 61.8 விழுக்காடு அதிகமாகும். இதில், மருத்துவம் மற்றும் சுகதாரத் துறையில் இத்தகைய பொருட்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 231.9 விழுக்காடு அதிகமாகும். இதுவரை, சீனாவில் தேசிய தரநிலைப் பொருட்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 441 ஆகும். பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் உயர்தர வளர்ச்சிக்கு இவை வலிமைமிக்க ஆதரவை வழங்கியுள்ளன.
தேசிய தரநிலைப் பொருட்களானது, வேதியியல், உயிரினங்கள் முதலிய பரிசோதனைகளில் இன்றியமையாத அளவுகோலாகவும், தேசிய அளவியல் திறன் கட்டுமானத்தின் முக்கிய பகுதியாகவும் திகழ்கிறது.
