கொரியத் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவு
கொண்டாட்டம் அக்டோபர் 9,10 நாட்களில், அந்நாட்டின் தலைநகர் பியொங்யாங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் தலைமையமைச்சருமான லீச்சியாங் இதில் கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சி மற்றும் இராணுவ அணி வகுப்பை பார்வையிட்டார்.
இதனிடையில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் டோ லாம், ரஷியாவின் யுனைடெட் ரஷ்ய கட்சியின் தலைவரும், கூட்டாட்சி பாதுகாப்பு மாநாட்டின் துணைத்
தலைவருமான திமித்ரி மெட்வேதேவ் ஆகியோருடன் லீச்சியாங் பேச்சுவார்த்தை நடத்தினார்.