வெனிசூலாவின் தற்போதைய அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மோரோஸ், அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்றது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஜூலை 29ஆம் நாள் கூறுகையில், வெனிசூலாவின் அரசுத் தலைவர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கும், அரசுத் தலைவர் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றதற்கும் சீனா வாழ்த்து தெரிவித்தது. சீனாவும், வெனிசூலாவும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளிக்கும் நல்ல கூட்டாளிகளாகும். இவ்வாண்டு, சீன-வெனிசூலா தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. வெனிசூலாவுடன் இணைந்து, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் உள்ளடக்கங்களைச் செழிப்பாக்கி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் செவ்வனே நன்மை புரிய சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
வெனிசூலாவின் அரசுத் தலைவர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு சீனா வாழ்த்து
You May Also Like
More From Author
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்
August 20, 2025
அமெரிக்க ராணுவ தொழிற்துறை நிறுவனங்களின் மீது சீனா தடை நடவடிக்கை
December 16, 2024
மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பதிவு
August 18, 2024