நேபாள-சீன புதிய துறைகளிலான ஒத்துழைப்பு

நேபாள வெளியுறவு அமைச்சர் சிசீர் 14 முதல் 17ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சீன ஊடகக் குழுமத்திற்கு பேட்டியளித்தார்.

பேட்டியில் அவர் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டு நட்புறவை அடிப்படையாக கொண்டு, பல துறைகளில் சீனா நேபாளத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றது. அடிப்படை வசதி கட்டுமானம், இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாகும். இத்துறையின் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாடுகளுக்கிடையிலான பரிமாற்றத்தையும் தொடர்பையும் வலுப்படுத்த நேபாளம் விரும்புகின்றது. சீன அறிவியல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியை நேபாளம் கண்டறிந்தது. இதிலிருந்து அனுப்பவங்களைச் சேகரித்து சொந்த தொழில் நுட்ப திறனை வளர்க்க நேபாளம் திட்டமிட்டுள்ளது. இரு நாட்டு ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் மேலும் விரிவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

You May Also Like

More From Author