ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி சுன் லெய் 19ஆம் நாள் ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் 2026ஆம் ஆண்டு மனிதநேய கூட்டத்தின் பொது விவாதத்தில் உரை நிகழ்த்தியபோது, சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு வலுவான மனிதநேய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது உலகளவில் மனிதநேய நிலைமை மோசமாக உள்ளது. மனிதநேய தேவைக்கும் பயன்படுத்தக் கூடிய வளங்களுக்கும் இடையேயான முரண்பாடு முனைப்பானது. இந்நிலையில் சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மனிதநேயத்தின் அடிப்படை கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும். மனிதநேய உதவிக்கு நிபந்தனைகள் இருக்கக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மனிதநேய மீட்புதவி, பேரழிவிலிருந்து மீட்சி மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட துறைகளில் சீனா வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது என்றும், மனிதநேய நெருக்கடியை எதிர்கொள்ள, சீனா தொடர்ந்து ஐ.நாவின் மனிதநேய நிறுவனங்களுக்கு நிலையான நன்கொடையை வழங்குவதோடு சர்வதேச சமூகத்துடன் இணைந்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
