சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஜுலை மாதத்தில் ச்சிங்டாவ் நகருக்கு அருகிலுள்ள கடல் மற்றும் வான் பரப்புகளில் ‘கூட்டு கடல்-2026’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை சீனா மற்றும் ரஷியாவின் கடற்படைகள் நடத்த உள்ளன. அதற்குப் பிறகு, இருதரப்பிலும் சில படைகள் பசிபிக் பெருங்கடலின் தொடர்புடைய கடற்பரப்புகளில் கூட்டுக் கடல் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும். இருதரப்பின் ராணுவங்களுக்கு இடையேயான வருடாந்திர ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான இப்பணி, பாதுகாப்பு சவால்களைக் கூட்டாக எதிர்கொள்வதையும் பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
