மியான்மரின் அரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட மின் ஆங் ஹ்லைங், இருநாட்டுறவு மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என எதிர்பார்ப்பைத் தெரிவித்தார். சீன ஊடகக் குழுமத்துக்கு அவர் அண்மையில் அளித்த சிறப்புப் பேட்டியில், தனது பயணத்தின் மூலம் மியான்மர்-சீனா இடையே நட்புறவை அதிகரித்து, சொந்த நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, சீனாவுடன் பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மேலும், இருநாட்டு வர்த்தக நிலையை உயர்த்தும் வகையில், சீன தொழில் நிறுவனங்களை மியன்மாரில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், சீனாவுடன் இணைந்து எல்லை பகுதி பாதுகாப்பு, அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்கவும் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
சீனாவுக்கு 10க்கும் மேற்பட்ட முறைகள் வருகை தந்த மின் ஆங் ஹ்லைங், சீனாவின் நவீனமயமாக்க வளர்ச்சியை கண்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், புதிய யுகத்தில் சீனா பெற்றுள்ள பெரும் வளர்ச்சியை அனைவரும் கண்டுள்ளனர். சீனாவின் பல மாநிலங்களிலும் நகரங்களிலும் பயணம் மேற்கொண்டுள்ளேன். சீனாவின் வளர்ச்சி மாதிரி மியான்மருக்கு கற்றுக்கொள்ளத்தக்க ஒன்று என்று தெரிவித்தார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றி குறிப்பிடும்போது, மியான்மரும் இம்முன்மொழிவில் இணைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். இந்த ஒத்துழைப்பின் கட்டுக்கோப்பின் கீழுள்ள மியான்மர்-சீனா பொருளாதார இடைவழி, மியான்மரின் தேசிய வளர்ச்சிக்கும் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். இதன் மூலம் மியான்மர் உலகுடன் இணையும் வழியாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
