பிரிட்டனின் காணொளி பதிவர் ஒருவர் சமீபத்தில் சீனாவில் சோதனை ஒன்றை மேற்கொண்டார். அவர் தனது மடி கணினியை ஒரு காஃபியகத்திலுள்ள மேசையில் வைத்து விட்டு வெளியே சென்றார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பிய அவர் தனது கணினி அப்படியே இருந்ததை கண்டு வியப்படைந்தார். இத்தகைய பாதுகாப்பு சோதனை தற்போது வெளிநாட்டவர்கள் சீனாவை அறிந்து கொள்ளும் புதிய வழிமுறையாகும்.
இதனிடையே, சீனாவின் பாதுகாப்பானது, வெளிநாட்டு சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளது. சாலை பக்கத்தில் வைக்கப்பட்ட பொதிகள் தவறாக எடுக்கப்படாமை, கடைகளில் வாடிக்கையாளர்கள் தன்னார்வத்துடன் பணம் செலுத்துதல், விடியற்காலையில் தனியாக வெளியே ஓட்ட பயிற்சி ஆகியவை வெளிநாட்டவர்களுக்கு வியப்பூட்டுகின்றன. ஆனால் அவர்களின் பார்வையில் நம்ப முடியாத இந்த விஷயங்கள் எல்லாம் சீனர்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்படுகின்றன. அமெரிக்காவின் கேலப் நிறுவனம் வெளியிட்ட 2025ஆம் ஆண்டு உலக பாதுகாப்பு அறிக்கையின்படி, பொது மக்களின் பாதுகாப்பு உணர்வு, சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீடு வரிசையில் மேலை நாடுகளை விட சீனாவின் இடம் மிகவும் உயர்வு.
சீனாவின் பாதுகாப்பு எப்படி உருவாக்கப்பட்டுள்ளது? சீனாவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனும், அனைவரும் பங்கெடுக்கும் பயனுள்ள மேலாண்மை முறைமையுடனும், உறுதியான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் நவீனமயமாக்கலின் முன்னேற்றத்துடன் சீன மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருவதோடு, மனதில் பாதுகாப்பு உணர்வும் மேலும் உறுதியாக உள்ளது என்று சீன பெக்கிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். இத்தகைய பாதுகாப்பு உணர்வு, சீன நிர்வாகத்தின் பெரும் பயனை நிரூபித்து, சீனாவின் அமைப்புமுறை சார் நன்மைகளை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
