தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.
இந்திய குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தனது முதல் நிகழ்ச்சியாக பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்தார்.
முன்னதாக, மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்த துணை ஜனாதிபதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றடைந்தார்.
அங்கு, தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, தேசத் தலைவருக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் உடன் இருந்தனர்.
தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!
