சீனா, இந்தியா ஆகிய இரு தரப்பின் ஒத்த கருத்தின்படி, சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான வாங்யீ டிசம்பர் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் இந்திய சிறப்புப் பிரதிநிதியும், இந்திய தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகருமான அஜித் தோவலுடன் இரு நாட்டு எல்லைப் பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 23ஆவது பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியேன் 17ஆம் நாள் இத்தகவலைத் தெரிவித்தார்.