இங்கிலாந்து பிரதமர் அதிகாரப்பூர்வ ராஜினாமா

Estimated read time 0 min read

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட் வளாகத்திற்கு வெளியே நின்றபடி, தனது விலகல் முடிவையும் அதற்கான கால அட்டவணையையும் அவர் முறைப்படி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
கடந்த 2024 ஜூலை பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த போதிலும், கடந்த சில வாரங்களாகவே ஸ்டார்மரின் தலைமைக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்தன.
அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள் அளித்த தொடர் அரசியல் நெருக்குதல்களுக்குப் பணிந்தே, பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவி காலத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author