ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின.
இதனால் பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடக்கு ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
