சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜூன் 22ஆம் நாள் லியௌநிங் மாநிலத்தின் டாலியன் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், புதிய யுகத்தில் சீனாவின் வடக்கிழக்கு பகுதியில் பன்முக வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கத் தொழில் அமைப்புமுறையின் கட்டுமானம் பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் முன்வைத்த முக்கிய கட்டளைகளை ஆழமாக செயல்படுத்தி, நுண்ணறிவுமயமாக்கம், பசுமைமயமாக்கம், ஒருங்கிணைப்புமயமாக்கம் ஆகியவற்றில் ஊன்றி நிற்க வேண்டும் என்றார். மேலும், உயர்நிலை சாதனத் தயாரிப்புத் தொழிலைப் பெரிதும் வளர்த்து, நவீனமயமாக்கத் தொழில் அமைப்புமுறையின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தி, உயர்தர வளர்ச்சிக்கு புதிய இயக்காற்றலை ஊட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
டாலியன் கப்பல் கட்டும் தொழில் நிறுவனம், டாலியன் அணுசக்தி மற்றும் எண்ணெய் வேதியியல் தொழில் நிறுவனம் ஆகியவற்றில் லீ ச்சியாங் முறையே ஆய்வு பயணம் மேற்கொண்டார்.
