சீனாவில் கோடைகால தானிய கொள்முதல் துவக்கம்

Estimated read time 0 min read

 

சீனாவில் கோதுமை அறுவடை பணிகள் அடிப்படையில் முடிந்ததுடன், கோடைகால தானிய கொள்முதல் பல்வேறு இடங்களிலும் தொடங்கி வருகிறது என்று தேசிய உணவு மற்றும் உத்திநோக்கு இருப்புகள் நிர்வாகம் வெளியிட்ட தகவல் காட்டுகிறது.

நடப்பாண்டில் கோதுமை கொள்முதல் அளவு சுமார் 10 கோடி டன்னை எட்டி, கடந்த ஆண்டில் செய்யப்பட்ட கொள்முதலுக்கு சமமாக உள்ளது. தற்போது வரை நாடளவில் கொள்முதல் செய்யப்பட்ட கோடைகால தானியங்கள் 3 கோடி டன்னைத் தாண்டியுள்ளது.

மேலும், பல்வேறு நிலையிலான தானிய இருப்பு நிறுவனங்கள் பழைய தானியங்களை விற்பனை செய்து புதிய தானியங்களை வாங்கும் நடவடிக்கையை ஒழுங்கான முறையில் மேற்கொண்டு வருகின்றன. சந்தையில் தானிய பரிவர்த்தனைகள் விறுவிறுப்பாக உள்ளன.

இவ்வாண்டின் கோடைகால தானிய கொள்முதல் செப்டம்பர் இறுதி வரை தொடர்கிறது. பல்வேறு இடங்களில் மொத்தம் 11 கோடி டன் கிடங்கு அளவை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் தானிய விற்பனை தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

You May Also Like

More From Author