சீன வர்த்தக முன்னேற்றச் சங்கம் அண்மையில் பெய்ஜிங்கில் 2026 உலக வினியோகச் சங்கிலி முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டது.
உலகத் தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலியின் முக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளராக சீனா எப்போதும் திகழ்கிறது என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
உலக வினியோகச் சங்கிலியை சீனா முன்னேற்றும் வெற்றிகரமான நடைமுறையையும், உலகிற்கு வழங்கும் புதிய வாய்ப்புகளையும் இந்த அறிக்கையில் தொகுக்கப்பட்டது.
தற்போது, சுங்கவரி தடைகள் அதிகமாக உள்ளது. வர்த்தக சர்ச்சை அடிக்கடி நிகழ்ந்துள்ளது. உலகம் புதிய கொந்தளிப்பான மாற்ற காலத்தில் நுழைந்துள்ளது. உலக வினியோகச் சங்கிலியை வலுப்படுத்தினால், இடர்பாடு மற்றும் அறைகூவல்களை பயனுள்ள முறையில் சமாளித்து, புத்தாக்க ஆற்றலை வலுப்படுத்தி, மேலும் நியாயமான உரிய உலக வினியோகச் சங்கிலி மேலாண்மை முறைமையை உருவாக்கி, உலகப் பொருளாதாரத்தின் உறுதியான அதிகரிப்புக்கு துணை புரிய முடியும் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
