டொமினிக்க தலைமையமைச்சர் ஷெர்த் வெகுவிரைவில் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் மார்ச் 20ஆம் நாள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இவ்வாண்டு, சீன-டொமினிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இச்சிறப்பு வேளையில், டொமினிக்க தலைமையமைச்சர் ஷெர்த் சீனாவில் பயணம் மேற்கொள்ள சீனா வரவேற்கிறது. இப்பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் அவரைச் சந்திக்கவுள்ளார். சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் அவருக்கு வரவேற்பு விழாவை நடத்தி, அவருடன் உரைநிகழ்த்தி, தொடர்புடைய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின் கையெழுத்திட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவருமான சௌ லெச்சி அவருடன் சந்தித்துரையாடவுள்ளார். இரு தரப்புறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவுள்ளனர்.