2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று மத்திய அரசு வெளியிட்டது.
அந்த பட்டியலில் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றிருந்தனர். 13 பத்மபூஷண் விருதுகளும், 5 பத்ம விபூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களில், முதல் கட்டமாக 66 பேருக்கு கடந்த மே மாதம் 25ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.
எஞ்சியவர்களுக்கு நேற்று (ஜூன் 22) பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் அதிபரும் சமூக சேவகருமான மயிலானந்தன், குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருதை பெற்றுக் கொண்டார். டென்னிஸ் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ், பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவரின் கையால் பெற்றார்.
கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், குடியரசுத் தலைவரிடம் பத்மஶ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.வேளாண்மை நுண்ணியியல் துறையில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கே.ராமசாமிக்கு குடியரசுத் தலைவர் பத்மஶ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார்.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்திய வெண்கல சிற்பக் கலைஞர் டாக்டர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலத்திற்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்திய சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடிக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.