ஜனநாயகன் ரிலீஸ் ஒத்தி வைப்பு – படக்குழு அறிவிப்பு!

Estimated read time 1 min read

நாளை வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு ஒத்தி வைக்கப்டுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகன் படத்தின் வெளியீடு, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author