சீனாவுக்கான இந்தியாவின் புதிய தூதருக்கு சீனா வரவேற்பு

சீனாவுக்கான புதிய தூதரை இந்தியா நியமித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் மார்ச் 20ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், நாடுகளுக்கிடையே நட்பு ஒத்துழைப்பு உறவை வளர்ப்பதற்கான முக்கிய பாலமாக தூதர்கள் திகழ்கின்றனர் என்றார்.

வெய் ஜியாமெங் எனும் சீனப் பெயரை தனக்கு சூட்டியுள்ள புதிய இந்திய தூதருக்கு சீனா வரவேற்பு தெரிவிப்பதாகவும், கடமைகளை நிறைவேற்ற சீனாவுக்கு வரும் அவருக்கு வசதியளிக்க தயாராகவும், பதவியேற்ற பிறகு சீன-இந்திய உறவு தொடர்ந்து மேம்படுவதற்கு அவர் ஆக்கப்பூர்வ பங்காற்றுவதை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author