செப்டம்பர் 15 முதல் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடக்கம்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தவெக அரசு அமைந்து சுமார் 40 நாட்கள் கடந்த நிலையில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் எவ்வித தடையுமின்றி செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ. 755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்திற்குத் தேவையான தங்கம் மற்றும் இதர பொருட்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் தற்பொழுது கோரப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author