நடிகர் கார்த்தி, சூது கவ்வும் படப்புகழ் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் வா வாத்தியார் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது கார்த்தி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதி மற்றும் சர்தார் படங்களைப் போலவே வா வாத்தியார் திரைப்படமும் தீபாவளி நேரத்தில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகாதது சோகத்தை ஏற்படுத்தினாலும், படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது; ரிலீஸ் எப்போது?
