பொது மக்கள் புத்தக வாசிப்புக்கான 3வது கூட்டம் துவக்கம்

பொது மக்கள் புத்தக வாசிப்புக்கான 3வது கூட்டம் ஏப்ரல் 23ம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குவேன் மிங் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், பரப்புரைத் துறையின் தலைவருமான லீ ஷூலேய் துவக்க விழாவில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.


பண்பாட்டின் செழுமை, நாட்டின் வளர்ச்சி, தேசிய மறுமலர்ச்சி ஆகியவை, புத்தகங்களால் ஏற்பட்ட பண்பாடு மற்றும் எழுச்சி சக்தியுடன் தொடர்புடையவை. பண்பாடு தொடர்பாக அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிந்தனையை சரியாகக் கற்றுக்கொண்டு, புதிய பண்பாட்டுக் கடமைக்குத் தோள் கொடுக்க வேண்டும்.

புத்தக வாசிப்பின் அடிப்படையில், இதற்கான சமூகச் சூழ்நிலை உருவாக்கத்தை முன்னெடுத்து, வாசிப்பின் ஆழத்தையும் அளவையும் தொடர்ந்து விரிவாக்கி, பொது மக்களின் புத்தக வாசிப்பின் நிலையை உயர்த்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் பங்கெடுத்த விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author