சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுப் பயன்பாட்டை நிதானப்படுத்துவது மற்றும் மேலாண்மையை மேம்படுத்தும் திட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தில், வெளிநாட்டுத் திறப்பு அளவை தொடர்ந்து விரிவாக்கும் சமிக்கையைச் சீனா வெளியிட்டுள்ளது. மேலும் உந்து ஆற்றல் வாய்ந்த சீனாவில் வெளிநாட்டு முதலீடு மேலும் நிதானமாக வளரும் என்று உலகளவில் பொதுவாகக் கருதப்படுகின்றது.
சேவைத் துறை உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் துறைகளை நெருக்கமாக ஒருங்கிணைக்கும் துறைகளில் சீனா அறிவியல்பூர்வமாக திட்டமிடுவது, உலகின் பல்வேறு நாடுகளுக்கு முக்கிய வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும் என்று சீன சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சீனத் தேசிய நெடுநோக்கு சிந்தனை கிடங்கு அலுவலகத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
சேவை, நிதி, மருத்துவம் மற்றும் மருந்து துறைகளுக்கு சந்தை நுழைவு அளவை விரிவாக்கும் நடவடிக்கை, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சித் தேவைகளுக்குப் பொருந்தியதோடு வெளிநாட்டு முதலீடுகளுக்கும் புதிய வளர்ச்சி பாதையைக் கொண்டு வரும்.
அமெரிக்க காநிங் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநரும், சீனச் சந்தையின் தலைமை இயக்குநரும் லீன் சுன் மெய் செய்தியாளர்களுக்கு கூறுகையில்,
இத்திட்டம், எமது நிறுவனத்திற்குத் தெளிவான வளர்ச்சி பாதை மற்றும் வலிமையான புத்தாக்க உத்தரவாதம் அளித்துள்ளது. எமது நிறுவனம் சீனாவில் முதலீடு மற்றும் ஒத்துழைப்புகளை விரிவாக்குவதை தொடருகின்றோம் என்றார்.
தொடர்புடைய தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில், 8000க்கும் மேலான வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடுகளை அதிகரித்துள்ளன. முதலீட்டுத் தொகை முந்தைய ஆண்டை விட 10 விழுக்காடு உயர்ந்துள்ளது. இவ்வாண்டின் முதல் 5 திங்கள்காலத்தில், சுமார் 4000 வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்கான முதலீடுகளை அதிகரித்துள்ளன.
