2026ஆம் ஆண்டு சீன விளம்பரத் தொழிலின் வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கை 23ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீனத் தேசிய சந்தை ஒழுங்குமுறைப் பணியகமும் சீனப் பொருளாதாரத் தகவல் சேவை நிறுவனமும் கூட்டாக வெளியிட்ட இவ்வறிக்கையில், 2025ஆம் ஆண்டு சீனாவில் விளம்பரத் தொழிலின் மொத்த வருமானம் முதன்முறையாக 2லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. விளம்பரத் தொழிலின் வளர்ச்சிக் குறியீடு 143.3 புள்ளிகளை எட்டி 2024ஆம் ஆண்டை விட, 11.6விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் இத்தொழிலின் வளர்ச்சிக் கட்டமைப்பும் மேலதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீன விளம்பரத் தொழில் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியைத் தொடர்ந்துள்ளது.
