இந்திய தலைமை அமைச்சர் மோடி ஜுன் 23ம் நாள் புது தில்லியில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகார உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்க வந்த பன்னாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார அலுவலகத்தின் இயக்குநருமான வாங்யீயுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
மோடி கூறுகையில், தற்போதைய நிலைமையில், இரு நாடுகள் பாரம்பரிய நட்பை தொடர்ந்து, பயன் தரும் ஒத்துழைப்பை முன்னெடுத்து, உலகின் வளரும் நாடுகளின் பொது நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வாங்யீ கூறுகையில், இந்தியாவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்த சீனா விரும்புகிறது. சீன-இந்திய உறவின் சுமுகமான வளர்ச்சியை நிலைநிறுத்தி, தத்தமது நவீனமயமாக்கப் போக்கை முன்னேற்றுவது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கும், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது என்று கூறினார்.
