சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை மட்டுமின்றி, திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 13 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை எந்த வழக்கு தொடர்பாக நடத்தப்படுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. சோதனைக்குப் பிறகே இது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-26 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்துள்ளார்.
