புதிய டிஜிபி யார்?- 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்

Estimated read time 0 min read

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது.

டிஜிபி/தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பதவிக்கு 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியலை யுபிஎஸ்சி அங்கீகரித்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒருவர் ஓரிரு நாட்களில் உயர் பதவியில் நியமிக்கப்படுவார்.ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் டிஜிபியாகும் அதிகமான வாய்ப்பு மகேஷ் குமார் அகர்வாலுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக யுபிஎஸ்சி கமிட்டி ஆலோசனை மேற்கொண்டது.டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச்செயலாளர் மணிவாசன் பங்கேற்றனர்.

You May Also Like

More From Author