சிறுமி கொலை வழக்கில் சிஎம் விஜய் அதிரடி…. பெற்றோருக்கு போனில் ஆறுதல்…. அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவி….!! 

Estimated read time 0 min read

கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பெற்றோரை, தமிழக முதலமைச்சர் விஜய் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் 7 லட்ச ரூபாய்க்கான நிதியுதவிக் காசோலை நேரில் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் நேராகச் சிறுமியின் வீட்டிற்குச் சென்று இந்த நிவாரணத் தொகையை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

You May Also Like

More From Author