பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்

செப்டம்பர் 22ம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில், பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பது மற்றும் இரு நாட்டுத் தீரவு தொடர்பான சர்வதேச கூட்டம் நடைபெற்றது. அதில் பிரான்ஸ் பெல்ஜியம், லக்சம்பர்க் முதலிய 6 நாடுகள், பாலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக்கொண்டன. அதற்கு முன், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல் ஆகியவை ஒரே முடிவையும் எடுத்துள்ளன.

இதுவரை ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளில் 152 நாடுகள், பாலஸ்தீன நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. ஐ.நா பாதுகாப்பவையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் 4 நாடுகள் பாலஸ்தீன நாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. பாலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக்கொள்வது, சர்வதேச பொது கருத்து என்பதில் ஐயமில்லை.

அதே வேளையில், பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்பதற்கு, இரு நாட்டுத் தீர்வு, ஈடிணையற்றது என்றும் இவ்வழிமுறைக்கு அரசியல் ஆதரவை வலுப்படுத்த வேண்டும் என்றும் மென்மேலும் அதிகமான நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் அமெரிக்கா தூதாண்மை தனிமையில் சிக்கிக்கொண்டுள்ளதை, அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகளின் மாற்றம் கோடிட்டுக் காட்டுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author