சென்னை காரப்பாக்கம் டெக் மகேந்திராவில் பயங்கர தீ விபத்து!

Estimated read time 0 min read

சென்னையின் பிரதான தகவல் தொழில்நுட்பப் பகுதியான ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அலுவலகத்தின் ஒரு பகுதியில் கரும்புகை வெளியேறத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீ வேகமாகப் பரவியதால், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மிகுந்த அச்சத்துடன் கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டதால், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது தீயை அணைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

You May Also Like

More From Author