சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு ராணுவ உதவி மற்றும் ஆயுத விற்பனை செய்வதை அமெரிக்கா சமீபத்தில் மீண்டும் அறிவித்தது.
மேலும், அமெரிக்காவின் 2025ஆம் நிதியாண்டில் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்ட மசோதாவில் சீனாவுக்கு எதிரான பல எதிர்மறை விதிகள் அடங்குகின்றன.
ஒரே சீனா கொள்கை, சீனா-அமெரிக்கா இடையே மூன்று கூட்டறிக்கைகள் ஆகியவற்றை அமெரிக்காவின் இந்த செயல்பாடுகள் கடுமையாக மீறியுள்ளன. அதேவேளையில், சீனாவின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டையும் இவை கடுமையாக மீறியுள்ளன.
சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டு தடைகளுக்கு எதிரான சட்டத்தின் கீழுள்ள 3, 4, 5, 6, 9 மற்றும் 15ஆவது விதிகளின் படி, இன்ஸ்டு நிறுவனம், ஹட்சான் தொழில்நுட்ப நிறுவனம், சரோனிக் தொழில்நுட்ப நிறுவனம், ரேதியான் கனாடா, ரேதியான் ஆஸ்திரேலியா, ஏர்காம் நிறுவனம், ஒசினீரிங் இன்டெர்னஷ்னல் நிறுவனம் ஆகிய 7 நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா முடிவு எடுத்துள்ளது.
சீனாவிலுள்ள சொத்துக்கள் முடக்கம், சீனாவிலுள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அவற்றுடன் வர்த்த்கம் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை ஆகிய நடவடிக்கைள் அடக்கம். இந்த முடிவு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் முதல் அமலுக்கு வருகிறது.