தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பழைய கிளாசிக் படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்கு வைக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது இளம் நடிகர் கவினின் அடுத்த புதிய திரைப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் பட தலைப்பான பேர் சொல்லும் பிள்ளை சூட்டப்பட்டுள்ளது.
தண்டட்டி திரைப்படத்தை இயக்கி விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் ராம் சங்கையா இயக்கும் இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கவின் படத்தில் இணையும் லப்பர் பந்து ஹீரோயின்!
