நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தின் முதல் பாடல் ‘அந்தகன் ஆன்தம்’ நேற்று வெளியானது. இதனை நடிகர் விஜய் வெளியிட்டார்.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பது சந்தோஷ் நாராயணன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே சந்தோஷ் நாராயணன் எக்ஸ்-இல் ஓர் பதிவை இட்டிருந்தார்.
அதில், அவர், “வரலாற்றில் முதன்முறையாக, ஆடியோ லேபிளும் ஒரு குருட்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறது. FYI உண்மையான இசை/பாடல்/அமைப்பு/மிக்ஸ்/மாஸ்டர் உண்மையில் என்னுடையதா என்பதைச் சரிபார்க்க நான் கட்டணம் வசூலிப்பதில்லை.” என பதிவிட்டிருந்தார்.