இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 672.58 பில்லியன் டாலராக உயர்வு: ரிசர்வ் வங்கி தகவல்  

Estimated read time 0 min read

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஜூன் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 963 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, மொத்தம் 672.587 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு சுமார் 9.985 பில்லியன் டாலர்கள் என்ற பெரிய அளவில் சரிவை சந்தித்து 671.625 பில்லியன் டாலராகக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ஒரே வாரத்தில் அந்நியச் செலாவணி மீண்டும் உயர்ந்துள்ளது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author