வங்கதேச தலைமையமைச்சருடன் ஜாவ் லெஜி சந்திப்பு

சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி ஜூன் 26ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் வங்கதேச தலைமையமைச்சர் தாரிக்குடன் சந்திப்பு நடத்தினார்.

ஜாவ் லெஜி கூறுகையில், இருநாடுகளின் அரசு தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய ஒருமித்த கருத்துக்களை செயல்படுத்தவும், சீன-வங்கதேச உறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றார். மேலும், இருநாட்டு நடைமுறை ஒத்துழைப்பிற்கு சிறந்த சட்ட சூழ்நிலையை உருவாக்கும் வகையில், சட்டமியற்றல், கண்காணிப்பு ஆகிய பணிகளில் அனுபவப் பரிமாற்றங்களை ஆழப்படுத்த வங்கதேச தேசியப் பேரவையுடன் இணைந்து செயல்பட சீனத் தேசிய மக்கள் பேரவை விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

சீனாவுடன் இணைந்து, பன்முக உத்திப்பூர்வ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சட்டமியற்றல் அமைப்புகளுக்கு இடையிலான பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும், வங்கதேசம் எதிர்பார்ப்பதாக தாரிக் கூறினார்.

You May Also Like

More From Author