இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் தங்கலான்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்த போது, தன்னை ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல் ராஜா அடுத்த படத்திற்காக மீண்டும் அணுகியுள்ளார் எனவும், அதற்காக ஒரு பெரிய நடிகரை ஞானவேல் ராஜா அழைத்து வர உறுதி தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த சூழலில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ரஞ்சித்திடம், இதை சார்ந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான பதில் அதிகாரபூர்வமாக கிடைக்கும் எனவும் அதுவரை பொறுமையாக இருக்குமாறும் ரஞ்சித் தெரிவித்தார்.
பா. ரஞ்சித் அடுத்ததாக இயக்கப்போவது கிடப்பில் போடப்பட்ட சூர்யாவின் படமா?
