பேரழிவை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவான மற்றுமொரு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் மரகாய் (Maracay) நகரில் இருந்து வடமேற்கே 61 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இதன் பலத்த அதிர்வுகள் மரகாய் மற்றும் தலைநகர் கராகஸ் ஆகிய இரு முக்கிய நகரங்களிலும் உணரப்பட்டதால், ஏற்கனவே அச்சத்தில் உறைந்து போயிருக்கும் பொதுமக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர்.
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்: 920 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, மீட்புப் பணியில் தொய்வு
