வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

Estimated read time 1 min read

நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டில், வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக வேண்டுமென்றால், வளர்ந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் விக்சித் பாரத் – 2047-ஐ நோக்கி தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்ட நிகழ்ச்சி ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமென்றால் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் மகேந்திர தேவ், கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்ததாகவும், நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தை எட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

You May Also Like

More From Author