சீனாவின் தியன்ஹே ஷிங்யீ எனும் புதிய தலைமுறை மீத்திறன் கணினி முறைமை, டிசம்பர் 6ஆம் நாள் குவாங்சோ நகரில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டு மீத்திறன் கணினி புத்தாக்கப் பயன்பாட்டு மாநாட்டில் வெளியிடப்பட்டது.
கணிமை, இணையம், சேமிப்பு, பயன்பாடு உள்ளிட்ட பல துறைகளில் அது தியன்ஹே-2 எனும் மீத்திறன் கணினியைத் தாண்டியுள்ளது.
பயன்பாட்டை மையமாகக் கொண்டு, உள்நாட்டு முன்னேறிய கணிமை கட்டமைப்பில் முக்கியமான தொழில் நுட்பங்களால் இம்முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.
குவாங்சோ நகரம், குவாங்டோங் மாநிலம், குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம் ஆகியவற்றின் அதி நவீன தொழில் நுட்ப முன்னேற்றம், நெடுநோக்கு திட்டப்பணிக் கட்டுமானம், தொழில்துறை மேம்பாடு மற்றும் மாற்றத்துக்கு அது வலுவான ஆதரவு அளிக்கும் என்று குவாங்சோவிலுள்ள தேசிய மீத்திறன் கணினி மையத்தின் தலைவர் தெரிவித்தார்.