அண்மையில், ஃபிஜி நாடாளுமன்றப் பிரதிநிதிக் குழு, நாடாளுமன்றத் தலைவர் கிடோகோவின் தலைமையுடன் சீனாவில் பயணம் மேற்கொண்டது.
இப்பயணம் குறித்து, கிடோகோ சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த போது கூறுகையில், இந்தப் பயணத்தின்போது, வளர்ச்சி துறை பற்றி முக்கியமாக அறிந்து கொண்டோம். இதன் அனுபவங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். இத்துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள், எங்கள் வளர்ச்சித் தேவையை நிறைவேற்ற துணைப் புரியும் என நம்புவதாக தெரிவித்தார்.
சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கிய முதலாவது பசிபிக் தீவு நாடாக ஃபிஜி திகழ்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை, பயனுள்ள ஒத்துழைப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் சீனாவும் ஃபிஜியும் சாதனைகளைப் பெற்று, பெரிய-சிறிய நாட்டு உறவின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளன. இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து அவர் கூறுகையில், இரு நாட்டுறவை வலுப்படுத்தவும், வேளாண்மை, மீன்பிடிப்பு, அடிப்படை கட்டுமானம், பாதை கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும் விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த பல்வேறு முன்மொழிவுகளை ஆதரிப்பதாகவும், ஃபிஜிக்கு மட்டுமல்ல, உலக எதிர்காலத்துக்கும் வழிகாட்ட சீனா தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.