தமிழ் திரையுலகில் ஒரே வாரத்தில் பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், வருகிற ஜூலை 17ஆம் தேதியன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 8 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத பாக்ஸ் ஆபீஸ் மோதல், தமிழ் சினிமா வர்த்தக வட்டாரங்களிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்கு வெளியீட்டு பட்டியலின்படி அன்பே டயானா, அருள்வான், அர்ஜுனன் பேரு பத்து, ஜி.டி.நாயுடு, தி டார்க் ஹெவன், பகவான், பிளாக் கோல்ட் மற்றும் தெலுங்கிலிருந்து டப் செய்யப்படும் ஓ சுகுமாரி ஆகிய 8 திரைப்படங்கள் ஜூலை 17 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் சில நடுத்தர பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் அடங்கும்.
ஜூலை 17-ல் மோதும் 8 திரைப்படங்கள்: திரையரங்கு ஒதுக்கீட்டில் சிக்கல் எழும் அபாயம்
