சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்பு தூதரும், சீன தேசிய மக்கள் பேரவையின் துணைத் தலைவருமான பங் ச்சியிங்ஹுவா, அழைப்பை ஏற்று, 21ஆம் நாள், நமீபிய அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில்,
சீன-நமீபிய உறவு நீண்டகாலமானது. இவ்வாண்டு இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவாகும்.
இதை வாய்ப்பாக கொண்டு, நமீபியாவுடன் இணைந்து, உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, நடைமுறையான ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார்.