சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற உறுப்பினர்களை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 6ஆம் நாள் பிற்பகல் சந்தித்து, அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இரு கூட்டத்தொடர்களில் பங்கெடுத்த மகளிர் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் பணியாளர்கள், பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த மகளிர், ஹாங்காங், மக்கௌ, மற்றும் தைவானிலுள்ள மகளிர், வெளிநாடுகளிலுள்ள சீன மகளிர் ஆகியோருக்கு, ஷி ச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.