2024 ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்கான செய்தி ஊடக ஒத்துழைப்புக் கருத்தரங்கு 28ஆம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் செங்துவில் துவங்கியது.
இதன் தொடக்கவிழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக உருவாக்கும் முன்மொழிவை சீனா முதலில் வழங்கியுள்ளது. இத்திட்டம் கொண்டு வரும் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சாதனைகள் உலகத்தைச் சேர்ந்தவை. இவ்வளர்ச்சிக்கான சாதனைகளை வெளிகாட்டும் முக்கிய ஜன்னலாக செய்தி ஊடகங்கள் விளங்குகின்றன.
தவிரவும் இக்கருத்தரங்கு பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் பாலமாகவும் திகழ்கின்றது. பல தரப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் கதைகளைச் சீராக எடுத்துக்காட்டி, பயனுள்ள வளர்ச்சியை விரைவுபடுத்தும் கடமைக்குச் செய்தி ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
செய்தி ஊடக ஒத்துழைப்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தைக் கூட்டாக ஆழமாக்கி, பல்வேறு நாடுகளின் வரலாறு, பண்பாட்டின் ஈர்ப்பு, யுகத்தின் மதிப்பு போன்றவற்றை வெளிக்காட்டி, மக்களுக்கிடையில் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும் என்னும் இதில் கலந்துகொண்டோர் கருத்தை தெரிவித்தனர்.